• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நானே வருவேன் படம் எப்படி இருக்கு… திரைவிமர்சனம்

ByA.Tamilselvan

Sep 29, 2022

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் நானே வருவேன்..இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.
தனுஷ் செல்வராகவன் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் இதுவரை வெளிவந்துள்ள படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறது என்று அறிவிப்பு வந்ததில் இருந்து இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.
இந்த படத்தில் இரட்டையர்களாக தனுஷ் ஒரு கதாபாத்திரத்தில் நல்லவராகவும், ஒருவர் சைக்கோபாத் ஆகவும் காட்டப்படுகிறார், அதில் ஒரு தனுஷ் சிறு வயதில் தனது தந்தையை கொன்று விடுகிறார். இதனால் அவரது அம்மா அவரை தனியாக விட்டு விட்டு வேறு ஊருக்கு சென்று விடுகிறார், பிறகு இருபது ஆண்டுகள் கழித்து மற்றொரு தனுஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். திடீரென்று அவரது குழந்தைக்கு மனநோய் பாதிக்கப்படுகிறது, இறுதியில் என்ன ஆனது என்பதே நானே வருவேன் படத்தின் கதை.