• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

எப்படி இருக்கிறது ‘பிரதர்’ : விமர்சனம்

Byவிஷா

Nov 6, 2024
இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம்ரவி நாயகனாக நடித்த திரைப்படம் ‘பிரதர்’. இத்திரைப்படம் எப்படி இருக்கிறது? பார்க்கலாம். 

சட்டப்படிப்பு படித்து பாதியில் நின்று விட்ட ஜெயம் ரவி, அவரது வீட்டிலும் பக்கத்து வீடுகளிலும் பல பிரச்சினைகளைக் கொண்டு வருகிறார். இதனால் உள்ளூர் பிரச்சனையிலிருந்து தப்பிக்க அவரது அக்கா பூமிகா ஊட்டியில் இருக்கும் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு சென்றதும் அக்கா குடும்பமும் இரண்டாகி விடுகிறது.
இதனால் கொதித்தெழும் அப்பா, அக்காவை குடும்பத்துடன் சேர்த்து வைத்தால்தான் நீ என் மகன் என்று காட்டமாக சொல்ல, அக்காவை சேர்த்து வைக்கும் முயற்சியில் வெற்றி கிடைத்ததா இல்லையா என்பதே மீதிக்கதை. ஜெயம் ரவி ‘லா’ பேசி லூட்டி அடிப்பது தொடங்கி உண்மை தெரியும்போது உருகி, மருகுவது என நடிப்பில் வெரைட்டி காட்டியிருக்கிறார்.
அழகாக வந்து போகிறார் பிரியங்கா மோகன். பூமிகா விடிவி கணேஷ் ராவ் ரமேஷ், நட்டி, சரண்யா பொன்வண்ணன், அச்யுத்குமார், சீதா, சதீஷ் கிருஷ்ணன் ஆகியோரும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘மக்காமிஷி’ பாடல் ரசிக்க வைக்கிறது.