• Tue. Dec 10th, 2024

வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்ததில் வீடுகள் எரிந்த சம்பவம்

Byவிஷா

Apr 12, 2024

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில், பாஜக வேட்பாளரை வரவேற்பதற்காக தொண்டர்கள் பட்டாசு வெடித்ததில் வீடுகள் எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, வீடு முழுவதுமாக பற்றிய அறிந்து நாசமானது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நாகை பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷை வரவேற்க வெடி வைத்து போது குடிசை வீடுகள் எரிந்த விவகாரம் தொடர்பாக பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இரட்டை சரம் வெடி விற்பனை செய்த பட்டாசு கடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் 2 வழக்குகள் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டன.