• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அரசு மகளிர் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ByG.Suresh

Mar 15, 2024

பல ஆண்டுகளாக அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களது பணி நிரந்தரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எங்களை பணிநிரந்தரம் செய்யாமல் வேறு எந்த நியமளமும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்காலத் தீர்ப்பினையும் பெற்றுள்ளோம். இவ்வாறிருக்க நேற்று (14/03/2024) அரசு கல்லூரியில் உள்ள 4,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு (TRB) வெளியிட்டுள்ளது. இது நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயலாகும்.
மேலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு கல்லூரியில் மிகக்குறைந்த ஊதியத்தில் பணிசெய்து வந்த கௌரவ விரிவுரையாளர்கள் 4,000 பேர் பணி இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, நீதிமன்றத்தினை அவமதிக்கும் கௌரவ விரிவுரையாளர்களை கருணையில்லாமல் பணிநீக்கம் செய்ய வந்த 4,000 உதவிப் பேராசிரியர் நியமன அறிவிப்பினை ரத்து செய்ய வலியுறுத்தி பல ஆண்டுகளாக எங்களின் ஈனக்குரல் இரத்த கண்ணீர் அடிப்படைத் தேவைக்கு போராடும் எங்களின் நிலையினை கேட்க மறுக்கும் தமிழக அரசின் செவிகளுக்கு கொண்டு செல்லும் விதமான இன்று(15-03-2024) ஒரு நாள் கல்லூரி முன்பு வாயில் முழக்கப் போராட்டம் மேற்கொள்கிறோம் என்பதனை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.