• Sun. Jan 4th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஹாங்காங்கின் அடையாளமாக திகழந்த ஜம்போ உணவகம் கடலில் மூழ்கியது…

Byகாயத்ரி

Jun 22, 2022

ஹாங்காங்கின் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் உணவகம், “ஜம்போ” கடலில் மூழ்கிவிட்டதாக வெளியான அறிவிப்பு உலகெங்கிலும் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹாங்காங்கில் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் ஜம்போ உணவகம், 1976 ஆம் ஆண்டு 3.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டது. உலக பிரபலங்கள் பலரின் மனம் கவர்ந்த இந்த பிரம்மாண்ட ஹோட்டல் ஹாங்காங்கின் அடையாளமாக திகழ்ந்தது வருகிறது. சுற்றுலா பயணிகளையும் அதிகம் ஈர்த்த உமவகமாக திகழந்தது.

கொரோனாவால் சுற்றுலா துறை, ஹோட்டல் துறை, போக்குவரத்து துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த பிரம்மாண்ட ஹோட்டலும், இந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை. ஜம்போ மிதவை ஹோட்டலும் கொரோனா காலத்தில் கடும் நிதிநிலை நெருக்கடியை சந்தித்தது. உணவகத்தை தொடர்ந்து நடத்த முடியாததால் 2020 ஆம் ஆண்டு உணவகத்தை மூடுவதாக அந்நிறுவனம் அறிவித்தது. மேலும், அதில் பணியாற்றி வந்த ஊழியர்கள் வேலை இழந்தனர். பராமரிப்பு செலவுகளை கூட சமாளிக்க முடியாமல் ஹோட்டலை ஹாங்காங்கில் கடந்த 14 ஆம் தேதி இந்த மிதக்கும் கப்பல் ஹாங்காங்கில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தென் சீன கடலில் உள்ள ஷீஷா தீவில் சென்றுகொண்டிருந்த போது ஜம்போ மிதவை கப்பல் நீரில் மூழ்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தண்ணீர் உள்ளே நுழைய தொடங்கியவுடன் கப்பலை மீட்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆனால் முயற்சி தோல்வி அடைந்தது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.எனினும், இந்த கப்பலில் பயணித்த ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சுமார் 50 ஆண்டுகளாக ஹாங்காங்கின் அடையாளமாக திகழ்ந்த ஜம்போ ஹோட்டல் கடலில் மூழ்கியது உலகெங்கிலும் உள்ள பலரையும் சோகமடைய செய்துள்ளது.