கொரோனா கால கட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, பெரும்புதூர் ஒன்றியம் மேட்டுப்பாளையம் அரசினர் தொடக்க பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட துவக்க விழா நேற்று நடந்தது.
மேட்டுப்பாளையம் ஊராட்சி தலைவர் தேவி வேலு தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை சோபியா வரவேற்றார். ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட கவுன்சிலர் பால்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டுப்புத்தகங்கள் உள்பட கல்வி உபகரணங்களை வழங்கினர். மேலும் கல்வி கற்பிக்க தன்னார்வலர்கள் அறிமுகம் செய்யபட்டனர். இவ்விழாவில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச நெல் விதை மூட்டைகள் வழங்கப்பட்டன.