• Thu. Feb 12th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று ஆய்வு..,

ByM.I.MOHAMMED FAROOK

Feb 11, 2026

தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ஆம் தேதி காரைக்காலில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் பரப்புரை மேற்கொள்ள உள்ள இடத்தை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று ஆய்வு செய்தார். அப்போது பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம், மாநில செய்தி தொடர்பாளர் அருள் முருகன், மாவட்ட தலைவர் முருகதாஸ் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர் அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி புதுச்சேரி காவல்துறை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருவதாகவும் 700க்கும் மேற்பட்ட காவலர்கள் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், ஏழு கம்பெனி துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சுற்றி ஆறு இடங்களில் வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அன்றாட போக்குவரத்தில் எந்த மாறுதலும் இல்லை எனவும் தெரிவித்தார். உள்துறை அமைச்சரின் வாகனத்தை பின் தொடர விதிகள் உள்ளதாகவும் அதனைப் பொறுத்தே வாகனங்கள் உள்துறை அமைச்சரின் வாகனங்களை பின் தொடர முடியும் எனவும் அவர் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் உள்துறை அமைச்சர் வரும் ஒரு நாள் மட்டும் மாவட்டம் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பறக்க விட அனுமதி இல்லை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.