கட்டபொம்மனின் 225-வது நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கை நாயுடு மகாஜன சங்கம் சார்பில் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 225-வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று சிவகங்கையில் உள்ள அரண்மனை வாசல் அருகே (16.10.2024), சிவகங்கை நாயுடு மகாஜன சங்கம் சார்பில், அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் தலைவர் தசரதன்
செயலாளர் சந்தானகிருஷ்ணன், பொருளாளர் பாண்டித்துரை, இளைஞரணி தலைவர் சரவணன் மற்றும் ஜவகர் நாயுடு, முத்து கண்ணன் நாயுடு, நாகராஜன், இளையராஜா
பூவாளி, சீனிவாசன், தியாகு, நாகேஸ்வரன், முருகானந்தம், முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.