• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இந்து முன்னணியினர் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு..,

ByVasanth Siddharthan

Jan 7, 2026

திருப்பூர் மாவட்டம் ஈட்டி வீரம்பாளையம் குமரன் குன்று முருகன் கோவிலை அகற்ற முயற்சித்த போது, இந்து முன்னணியினர் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம் அடைந்தார். கோவில் வருவாய்த்துறை புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக கூறி, அதை அகற்றும்படி அரசு அதிகாரிகள் கூறி வந்தனர். அதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கோவிலில் இருக்கும் சிலைகளை அகற்ற இன்று காலை வருவாய்த் துறையினர் அங்கு சென்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள், பக்தர்கள், இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில், சிலர் காயம் அடைந்தனர். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், காயம் அடைந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனை கண்டித்து திண்டுக்கல் மாநகராட்சி அருகே சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை காவல் துறையினர் கைது செய்தனர் .