• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

உதயநிதி,துரைமுருகன் போன்ற திமுகவினருக்கு இந்துமக்கள்கட்சி கண்டனம்!

ByKalamegam Viswanathan

Apr 5, 2026

தமிழகத்தில் நடைபெறுகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் திருக்கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இதில் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு தனது மகனுடன் துரைமுருகன் தரிசிக்க சென்ற போது அர்ச்சகர் பூசிய விபூதி,குங்குமத்தை உடனே தனது கைகுட்டையால் துரைமுருகன் அளித்துள்ளார்.அதேபோல் தொண்டர் கொடுத்த முருகப்பெருமானின் வேல் கொடுத்ததை உதயநிதி வாங்க மறுத்துள்ளார். இச்செயல் இந்துசமய சின்னங்களையும் இழிவுபடுத்தியும்,இந்துக்கள் மனதை புண்படுத்தியும் நடந்து கொண்ட துரைமுருகனுக்கும்,உதயநிதிக்கும் இந்துமக்கள்கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.

ராமநாதபுரத்தில் உதயநிதி வாக்கு சேகரிப்பின் போது அவருக்கு ஒருவர் பரிசாக வேல் கொடுத்த போது வேலை வாங்க மறுத்துவிட்டு மற்றொருவர் கொடுத்த புத்தர் சிலையை மட்டும் உதயநிதி வாங்கியது.திமுக இந்துகளுக்கு மட்டும் விரோதமான கட்சி என்று உதயநிதி நடந்த கொண்ட இந்த சம்பவமே சாட்சி.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி இந்துக்கள் குரல் கொடுத்தும்,நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தும் அதனை நிறைவேற்ற விடாமல் தீபம் ஏற்றுவதை தடுத்து நிறுத்தி பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தி இந்துக்கள் மனதை புண்படுத்தியும்,நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தும் நடந்து கொண்ட இந்துவிரோத திமுகவிற்கு திருக்கோவிலில் என்ன வேலை?

ஒரு பக்கம் கடவுளை வணங்குபவன் முட்டாள் என்று கூறிய கடவுள் மறுப்பாளர் ஈவேராவை தலையில் வைத்து திமுக கொண்டாடுகிறது. மறுபக்கம் தேர்தல் வந்தால் மட்டும் இந்துக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க வேண்டுமென்பதற்காக திருக்கோலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்வது போல் நடிப்பதும், பிறகு நெற்றியில் பூசிய விபூதி குங்குமத்தை அளிப்பதும் போன்ற நாடகத்தை திமுகவினர் நடத்தி வருகிறார்கள்.

அன்றே ஈவேரா அவர்கள் திமுகவினரை பார்த்து தேர்தல் வந்தால் ஓட்டுக்காக,பதவிக்காக யார் காலிலும் விழுவார்கள்,யாரையும் ஏமாற்றுவார்கள் போன்ற மற்றொரு அசிங்கமான வார்த்தையும் கூறினார்.அதை கூறினால் நன்றாக இருக்காது.
ஈவேரா கூறியதை போல் அன்று முதல் இன்றைய வரைக்கும் திமுகவினரின் குணம் கொஞ்சம் கூட மாறவில்லை.திருந்தவில்லை.

நான் ஒரு கிறிஸ்தவன் இந்துசனாதனம் கொசுவை போன்றது அதனை ஒழிக்காமல் விடமாட்டேன் என்று கூறிய உதயநிதியிடம் வேல் கொடுத்தால் உதயநிதிக்கு கோபம் வர தானே செய்யும்.
சனாதனம் என்றால் திருக்கோவில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய போவதும்,இந்து சாஸ்திர சம்பிரதாயங்கள் பின்பற்றுவதும்,இந்து மத கடவுள் நம்பிக்கைகளை நம்புவதும், கடவுள்களுக்கும்,குலதெய்வங்களுக்கும்,காவல்தெய்வங்களுக்கும் நேர்த்தி கடன் செலுத்துவதும், தாலி,பூணூல் அணிவதும், நெற்றியில் சமய சின்னங்கள் பூசுவதும்,விரதங்கள் இருப்பதும், தர்மத்தை பாதுகாப்பதும் போன்றவைகள் தான் சனாதனம்.அப்படிப்பட்ட சனாதனவாதிகளின் ஓட்டு திமுகவிற்கு தேவை இல்லை என்று இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தைரியம் இருந்தால் சனாதனத்தை ஒழிக்க நினைக்கும் உதயநிதி அவர்கள் கூறமுடியுமா?

திமுகவில் தொண்டனாக இருக்கும் ஒரு முருகப்பக்தன் அன்பாக கொடுத்த ஸ்ரீகந்தரின் ஆயுதமான வேலாயுதத்தை அசிங்கப்படுத்தும் விதமாக உதயநிதி வாங்க மறுத்தது முருகப்பெருமானின் வேலையும்,முருகப்பக்தர்களான இந்துக்களையும் வேண்டுமென்றே உதயநிதி அவமதித்துள்ளார்.

மேலும் திமுகவினர் மற்ற வழிபாட்டு தளங்களுக்கு செல்லும் போது அவர்களது மத சின்னங்களை அணிகிறார்கள்.அந்த மதத்தினர் கொடுக்கும் பொருட்களை வாங்குகிறார்கள்,உணவுகளை உண்ணுகிறார்கள்.ஆனால் இந்துமத வழிபாட்டு தளங்களுக்கு வந்தால் மட்டும் துரைமுருகன் போன்ற திமுகவினர் திடீரென நாத்தீகர்களாக மாறி சமய சின்னங்களை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொள்கிறார்கள்.

திமுகவினருக்கு ஈவேரா கொள்கையும் கிடையாது மற்ற எந்த கொள்கையும் கிடையாது. அவர்களுக்கு தேவை சாதி மத மொழி ரீதியாக மக்களை பிளவு படுத்தி ஆட்சி செய்யவேண்டும், கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடிக்க வேண்டுமென்ற ஒரே சிந்தனை மட்டும் தான்.

அதற்காக திமுக ஆட்சி செய்யும் போது பாவப்பட்ட இந்து சனாதனத்தை அழிக்க நினைப்பதும்,திருக்கோவில்களை இடிக்க நினைப்பதும், இந்துதெய்வங்களை இழிவுபடுத்த நினைப்பதும்,திருப்பரங்குன்றம் தீபத்தூணில் பாரம்பரியமாக ஏற்றப்பட்ட கார்த்திகை தீபத்தை ஏற்றவிடாமல் தடுத்து நிறுத்த நினைப்பதும்,இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குழைக்க நினைப்பதும்,திமுக மதசார்பற்ற கட்சி என்று கூறிவிட்டு இந்துக்களுக்கு எதிராக மட்டும் சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக செயல்படுத்த நினைப்பதும் போன்ற இந்துக்களுக்கு விரோத சுயநல ஆட்சியாக தான் திமுக கட்சி ஆரம்பித்ததில் இருந்து இன்றைய வரைக்கும் செயல்பட்டு வருகிறது.

இந்து சனாதனத்தை ஒழிக்க நினைக்கும் திமுகவினர் திருக்கோவில்களுக்குள் நுழையக் கூட தகுதியற்றவர்கள்.

இந்துக்களுக்கு எதிரானவர்கள் திமுகவினர் அல்ல என்று உங்களது இரட்டை வேடம் வேஷத்தை இந்துக்கள் யாரும் இனிமேல் நம்பமாட்டார்கள்.

ஆகவே தேர்தர்தலில் இந்துக்களின் ஓட்டுக்காக திருக்கோவில்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதை போல் நடிப்பதும்,நெற்றியும் பூசும் சமய சின்னங்களை அழிப்பதும் போன்ற இந்துக்களை ஏமாற்றும் வகையில் தொடர்ந்து திமுகவினர் நாடகங்களை நடத்தி வருகிறார்கள் என்று இந்துக்கள் அனைவரும் தெரிந்து கொண்டார்கள். திமுகவினரின் நாடகம் இனிமேல் இந்துக்களிடம் பலிக்காது.

இந்துக்களுக்கும் இந்து சனாதான தர்மத்திற்கும் எதிராக செயல்படும் இந்து மதகடவுள் நம்பிக்கை இல்லாத திமுகவினருக்கு நடைபெறுகின்ற சட்டமன்றத்தேர்தலில் தமிழக முழுவதும் இந்துக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை இந்த அறிக்கையின் மூலமாக இந்துமக்கள்கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு
M..சோலைகண்ணன்
இந்துமக்கள்கட்சி
மதுரை மாவட்டத்தலைவர்.
நாள்:05/04/2026.