• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிலை வைக்க இந்து முன்னணியினர் எதிர்ப்பு .
செவிலியர் வளாகத்தில் பரபரப்பு.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் கல்லூரி இயங்கி வருகிறது.இங்குள்ள செவிலியர் விடுதியில் நைட்டிங்கேல் சிலையை அனுமதியின்றி வைக்கப்படுவதாக சமூகவலைதளங்களில் வீடியோ வைரலாக பரவியது. இதற்காக பூமி பூஜை நடந்துள்ளது. இந்த நிலையில் செவிலியர் கண்காணிப்பாளர்,சிலை வைப்பதற்கு ஒவ்வொரு மாணவிகளிடமும் பணம் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மதத்தைப் பரப்பும் நோக்கில் செயல்படுவதாக தெரிகிறது. இதற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் டாக்டர் எஸ்.பி.எம்.செல்வம் எதிர்ப்பு தெரிவித்து எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தேனி மருத்துவமனை வளாகத்தில் இதுவரையிலும் எந்த சிலையும் நிறுவப்படவில்லை .புதிதாக எந்த சிலை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இது சக மனிதர்கள் மத்தியில் மனிதநேய பண்பை மீறுவதாகவும், மதநல்லிணக்கத்தை கெடுப்பதாக உள்ளது. எனவே அனுமதியின்றி சிலை வைக்க முயற்சி செய்த செவிலியர் கண்காணிப்பாளர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.