ட்ரை சைக்கிளில் இருசக்கர வாகனத்தின் பொருத்தி வாகனத்தை இயக்குவதால் அதிக அளவு விபத்து ஏற்படுகிறது.
மதுரை மாநகரில் சமீப காலமாக ட்ரை சைக்கிளில் முன்புறமாக இரு சக்கர வாகனத்தின் ஒரு பாகத்தை அதோடு இணைத்து மோட்டாரை வைத்து, இவர்கள் அதிக பாரத்துடன் செல்வதாலும் அதி வேகத்துடன் செல்வதாலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும், இவர்கள் செல்லும் வேகத்தில் சில சமயங்களில் சக்கரங்கள் தனியாக கழண்டு கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு பின்னால் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

இந்த நிலையில் இன்று மதுரை பைபாஸ் சாலை ஒரு பெண்மணி தன் குழந்தையை பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்லும் பொழுது பைபாஸ் சாலை போடி லைன் மேம்பாலத்தில் செல்லும் பொழுது ட்ரை சைக்கிளுடன் இணைக்கப்பட்டிருந்த எக்ஸெல் சூப்பர் வாகனத்தின் பின் சக்கரம் திடீரென கலன்று விழுந்தது. இதில் பின்னால் வந்து கொண்டிருந்த பெண்மணி நிலை தடுமாறி கீழே விழுந்தார். குழந்தையுடன் நல்வாய்ப்பாக பின்னால் எந்த ஒரு வாகனமும் வரவில்லை மாநகரப் போக்குவரத்து காவல்துறை இதுபோன்ற வாகனங்களை பறிமுதல் செய்து உரிய அனுமதி இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரையும் எதிர்பார்ப்பாக உள்ளது. நடவடிக்கை எடுப்பார்களா?
