• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

விஜய் சேதுபதி வழக்கிற்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்…

Byகாயத்ரி

Feb 18, 2022

சைதாப்பேட்டையை சேர்ந்த மகா காந்தி, கடந்த நவம்பர் 2ம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்தபோது, அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும், அதை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி தன்னையும் சாதியையும் பற்றி தவறாக பேசியதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இந்த சம்மன், வழக்கை ரத்து செய்யக் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 3ம் தேதி ஒத்திவைத்தார்.