விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் காலையிலிருந்து வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் திடீரென இரண்டு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை, சாலைகளில் குளம்போல் தேங்கிய மழைநீர். கழிவுநீரும், மழை நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால் கடைகளுக்குள் புகுந்த மழை நீர் வியாபாரிகள் வேதனை.
இராஜபாளையம் நகராட்சி நிர்வாகம் கழிவு நீர் செல்லும் வருகால்களை தூர் வருவதாக கூறி சேதப்படுத்தியதால், இது போன்ற அவல நிலை என கடை உரிமையாளர்கள் குற்றச்சாட்டுகின்றனர். மேலும் சரியாக தூர் வாராமல் இருப்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தீபாவளி விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகளும் துணிகள் வாங்க முடியாமல் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.