

வெப்பச் சலனம் காரணமாக மாலை நேரங்களில் நேற்று முதல் ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. நேற்று அவனியாபுரம் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் பலத்த மழை பெய்து, மின்னல் இடியால் பாதிப்பு ஏற்பட்டு, பல மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.
இன்று திங்கள் மாலை, திடீரென கருமேகங்கள் கூடி, இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டத் துவங்கியது.
மதுரை பைபாஸ், காளவாசல், விளாங்குடி, செல்லூர் மற்றும் தல்லாகுளம் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் மழை கொட்டி மகிழ்ச்சியையும் குளிர்ச்சியையும் ஏற்படுத்தினாலும், வேலை முடிந்து வீடு திரும்புவோர் குறிப்பாக பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மின்சாரமும் தடை செய்யப் பட்டதால், இயல்பு வாழ்க்கையில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.
