• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Byவிஷா

May 16, 2024

தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், 26 மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உட்பட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் அவசர கடிதம் அனுப்பியுள்ளார். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை எம்.ஆர்.சி. நகர், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தென்தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.