உலக இருதய தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையின் சார்பில் செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் இருதய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது..

இப்பேரணியில் நட்டாத்தி மருத்துவமனையின் மேலாளர் சாந்தி, நட்டாத்தி செவிலியர் பள்ளியின் முதல்வர் லாலி, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் மருந்து ஆளுநர்கள் இருதய விழிப்புணர்வு விழிப்புணர்வு பேனர்களை ஏந்தியவாறு ஊர்வலம் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக சென்று தேனி பழைய பேருந்து நிலையம் சென்று மீண்டும் மருத்துவமனை வளாகத்தில் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் Dr. கமலேஷ் , Dr.நிவாஸ் Dr. இராஜ கணபதி, Dr. ராகுல் இருதய விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு ஆற்றினர்.
இருதய ஊர்வலத்தின் ஏற்பாடுகளை செய்தி தொடர்பு மேலாளர் சேக் பரீத், அக்கவுண்டன்ட் முருகேசன்,மற்றும் இதர பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.