• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆரோக்கியக் குறிப்புகள்:

Byவிஷா

Apr 18, 2022

டிராகன் பழத்தின் நன்மைகள்:

தற்போது பழ அங்காடிகளில் வித்தியாசமாகக் கிடைக்கும் பழம் எது என்று கேட்டால் அது டிராகன் பழம்தான். இந்தப் பழம் பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தைப் போலவே காணப்படும். இது, கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்தப் பழத்தின் செதில்கள் பச்சை நிறமாக இருக்கும். இதன் மையத்தில், வெள்ளை அல்லது சிவப்பு நிறத்திலான இனிப்புக் கூழ், சிறு கருப்பு விதைகளுடன் இருக்கும். சராசரியாக 700 முதல் 800 கிராம் எடை கொண்ட டிராகன் பழம், உலகில் வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது. டிராகன் பழம் உடம்புக்கு நல்ல குளிர்ச்சியை தரக் கூடியது. இப்பழத்தில் ஆன்டி ஆக்சிடன்டுகள் இருப்பதால், புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது. டிராகன் பழம் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதயத்தில் உள்ள ரத்த நாளங்களை நன்றாகச் செயல்பட வைக்கிறது. வைட்டமின் பி 3 இருப்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து, பருமன் இல்லாத சீரான உடலமைப்பை உருவாக்குகிறது. டிராகன் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகளை வலிமைப்படுத்துகிறது, பார்வைத் திறனையும், பற்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.