மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவனர்பி. எல். ஏ.ஜெகநாத் மிஸ்ரா நிர்வாகிகள் உறுப்பினர்கள் முன்னிலையில் புதிய அரசியல் கட்சியாக நமது மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கினார்.

தொடர்ந்து புதிய அரசியல் கட்சிக்கான பெயர் அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கினார்,ஒருங்கிணைப்பாளர் பார்மாகணேசன், துணை ஒருங்கிணைப்பாளர் சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகளிர் அணி செயலாளர் ராஜேஸ்வரி அனைவரையும் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெகநாத் மிஸ்ரா, தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவன தலைவராக சுமார்16 ஆண்டு காலம் இந்த அமைப்பை தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிளை களைத் தொடங்கி அமைப்பை நடத்திவந்தோம். இந்த நிலையில் புதிய அரசியல் கட்சியாக தொடங்குவதற்கு 20 க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஓட்டு பெட்டிகள் வைத்து தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களிடம் அரசியல் கட்சி தொடங்கலாமா ? வேண்டாமா? என்று கருத்து வாக்கெடுப்பு 5 லட்சம் மக்களிடையே நடத்தினோம்.
இதில் 90 சதவீதம் மக்கள் அரசியல் கட்சி தொடங்க ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.அதன்படி எனது தலைமையில் புதிய அரசியல் கட்சியாக நமது மக்கள் முன்னேற்ற கழகம்,என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளோம் .
என்று அறிவிப்பு செய்தார். அனைத்து தரப்பு மக்களும் அரசியல் அதிகாரம் பெறும் வகையில் இந்த கட்சியை தொடங்கியுள்ளோம் .
இவ்வாறு ஜெகநாத் மிஸ்ரா கூறினார். பின்னர் செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்தார்,.புதிய கட்சி தொடங்குவதற்கு காரணம் என்ன? அனைத்து தரப்பு மக்களும் அரசியலில் அதிகாரம் பெற வேண்டும். உள்ளாட்சி அமைப்பு முதல் சட்டமன்றம் வரை பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பது எங்களின் நோக்கம்,
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த அரசியல் கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்கள்என்ற கேள்விக்கு
எங்களின் கொள்கை கோட்பாட்டுக்கு ஏற்ற ஒத்த கருத்துடைய கட்சிகளோடு கூட்டணி அமைப்பது குறித்து பொதுக்குழு, செயற்குழு முடிவெடுத்து நல்ல அறிவிப்பு வெளியிடுவோம். மேலும் 234 தொகுதிகளிலும் வெற்றியை நிர்ணயம் செய்கின்ற வாக்கு சதவீதங்களை நாங்கள் பெற்றுள்ளோம் என்று கூறினார்.
நிகழ்ச்சியில், மாநில நிர்வாகிகள் ஆர்.எஸ்.தமிழன் ,சாஸ்தா பாண்டியன்,தேனி பன்னீர்செல்வம், மாநில இளைஞரணி தலைவர் மணி,செயலாளர் சுறா,தலைமை நிலைய செயலாளர்கள்,கோவிந்த மணி,ரகுபதி,உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.