விருத்தாசலத்தில் கடுமையான சுட்டெரிக்கும் வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து காவல் துறையினர்க்கு கோடை வெயிலை சமாளிக்கும் விதத்தில்அவர்களுக்கு தொப்பி கண்ணாடி மற்றும் பழச்சாறு ஆகியவற்றை விருத்தாசலம் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் வழங்கினார். தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயில் வாட்டி எடுத்து வருகிற நிலையில்,

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் போன்ற பகுதிகளில் மிகுந்த அளவில் கடுமையான வெயில் தாக்கி வருகிறது. இருப்பினும் போக்குவரத்து காவல் துறையினர் போக்குவரத்து நெரிசபை கட்டுப்படுத்துவதற்காக வெயிலில் நின்று தங்கள் பணிகளை செய்து வருவதால் அவர்களை வெயில் தாக்காமல் இருப்பதற்கும் அவர்கள் உடல்நிலை கருதியும் விருத்தாசலம் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்பாலகிருஷ்ணன்,
விருத்தாசலம்போக்குவரத்துகாவல்ஆய்வாளர் கோவிந்தா சாமி ,உதவி ஆய்வாளர்கள் முருகன் குமார் ஆகியோர் தலைமையிலான போக்குவரத்து காவல் துறையினருக்குகுளிர்சாதன கண்கண்ணாடி,வெயிலை தாக்கு பிடிக்கும் அளவிற்க்கு வடிவமைக்கப்பட்ட தொப்பி,மற்றும் பழசாறுகள்,தர்பூசணி பழங்கள் ஆகியவற்றை வழங்கி அவர்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்களை கூறினார்.
மேலும் தினம்தோறும் வெயிலில் நின்று பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு பழச்சாறு மற்றும் வெயிலின் சூட்டை தணிக்க கூடிய தர்பூசணிஆகியவற்றை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.