• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிகினிங்’ படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்!-இயக்குநர் லிங்குசாமி பெருமிதம்..!

Byadmin

Jan 4, 2023

ஆசியாவிலேயே முதல்முறையாக ஒரே திரையில் இரண்டு படங்கள் என்ற தொழிழ்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளபடம் பிகினிங்
இப்படத்தை அறிமுக இயக்குநரான ஜெகன் விஜயா இயக்க, வினோத் கிஷன், கௌரி ஜி.கிஷன், ரோகிணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, “நீண்ட இடைவெளிக்குப் பிறகு எங்களுடைய திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பட வெளியீட்டில் இறங்கியதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.


இப்படம் எடுப்பதற்கு ஜெகன் அம்மாதான் நிலத்தை விற்று பணம் கொடுத்தார் என்று தெரிந்ததும், இப்படத்தின் ஆதரமான அடித்தளம் அங்கேயே தொடங்கிவிட்டது. உனது அம்மாவும், எனது அம்மாவும் உணர்வு வேறு வேறு அல்ல. ஒரு சரியான நபருக்கு துணையாக இருக்கிறோம் என்று மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆகையால், அவ்வளவு சாதாரணமாக இந்த துறையை விட்டு செல்ல மாட்டீர்கள். இந்த துறையும் உங்களை விடாது.
இப்படத்தை பிருந்தா சாரதியும், எடிட்டர் லெனினும் பார்த்துவிட்டு, இது விருதுக்கான படமில்லை. ஆனால் திரையரங்குகளில் வெளியாக வேண்டிய படம் என்றார்கள். அதை ப்ரிவியூ பார்த்தபோது நானும் உணர்ந்தேன். அதேபோல், இப்படம் வெளியானதும் இருக்கும் என்று நம்புகிறேன். ‘ஆனந்தம்’ படம் எடுத்தபோது என்ன உணர்ந்தேனோ, அதை இந்த படத்திலும் நான் உணர்ந்தேன்.

மிக சவாலாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது. மிகவும் திறமையான இயக்குநர், நுணுக்கமான அழகான இயக்குநர் என்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது.இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ‘இந்த லென்ஸை உபயோகப்படுத்தினேன்’ என்றார். கலை இயக்குநர் ‘புதியதாக ஒன்றை பயன்படுத்தினோம்’ என்றார். இதுதான் புதியதாக படம் எடுப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனுபவம்.இப்படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்திருக்கிறீர்கள். பாராட்டினால் எல்லோரும் இயக்குநர்தான் காரணம் என்று கூறுவார்கள். இயக்குநர் அனைவரிடமும் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார். எதிர்காலத்திலும் என்னுடைய நிறுவன படங்களிலும் உங்களை பயன்படுத்துவேன்.
இந்த ‘பிகினிங்’ படத்தைத் தொடர்ந்து ‘திருப்பதி பிரதர்ஸ்’ மற்றும் ‘மாஸ்டர் பீஸ்’ நிறுவனங்கள் இணைந்து பல நல்ல படங்களை வெளியிடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களைப் போல் சரியான ஆட்கள் இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு ஆதரவளிப்பேன்.
சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சிதான். என் பின்னாடி 40 பேர் இருக்கிறார்கள். அனைவரும் ஒரே எண்ணத்தில் சேர்ந்த கூட்டு முயற்சிதான் வெற்றியாகும். இதுவரை வெற்றி பெற்ற பெரிய கலைஞர்களுக்கும் அதுதான் நிகழ்ந்துள்ளது என்றார்