• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

காயல் அப்பாஸ் புத்தாண்டு வாழ்த்து

ByKalamegam Viswanathan

Dec 28, 2024

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான நாடாக இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர செய்ய வேண்டும் என காயல் அப்பாஸ் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,

புது வருடம் பிறக்கிறது என்றாலே அனைவருடைய மனதிலும் புதிய தன்னம்பிக்கை மேலோங்கும். இதுவரை சந்தித்த துன்பங்களும், துயரங்களும் புதிய வருடத்தில் நீங்காதா என்ற எதிர் பார்ப்பை உருவாக்கும்.

எத்தகைய சோதனைகள் வந்தாலும், தொடர்ந்து நமக்காக உழைக்கும் விவசாயிகளின் அர்ப்பனிப்பு நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை தொழில் துறை வீழ்ச்சி உள்ளீட்ட காரணங்களால் பல இலட்சக்கணகான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் தங்களது எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விக்குறியுடன் காத்திருகின்றனர்.

முடங்கி கிடக்கும் சிறு, குறு தொழில்களை மத்திய, மாநில அரசுகள் மீட்டுடெக்காமல் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்க முடியாது. ஆளும் அரசுகளின் நடவடிக்கைககளால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான நாடாக இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர செய்ய வேண்டும்.

ஆண்டு தோறும் தமிழகம் முழுவதும் புத்தாண்டை கொண்டாடும் வகையில் ஒரு சிலர் நள்ளிரவுகளில் மது அருந்தி மற்றும் மிக வேகமாக மோட்டார் வாகனங்களை இயக்கியதன் விளைவாக பல வாகனங்கள் விபத்துகுள்ளாகி உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றன. ஆகவே மோட்டார் வாகன விபத்துக்களை தடுத்து உயிர் சேதம் எதும் ஏற்படாமல் இருக்க தமிழக முழுவதும் புத்தாண்டு இரவில் காவல் துறையினர் மோட்டார் வாகன சோதனைகளை திவிர படுத்த வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

எனவே அனைவருக்கும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக, இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.