கோவை ராமநாதபுரம் சில்க் வில்லேஜ் கைத்தறி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் மத்திய அரசின் சேலம் நெசவாளர்கள் சேவை மையம் சார்பில் “சமர்த் 2வது” பேட்ச் துவக்க விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் மத்திய அரசு சேலம் நெசவாளர் சேவை மைய துணை இயக்குனர் கார்த்திகேயன், கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியின் இயக்குனர் Dr.அல்லிராணி, ஆவாரம்பாளையம் சர்வோதயா சங்க செயலாளர் சிவகுமார், ஜவுளி மற்றும் ஆடை தொழிலமைப்பு அறிவுரையாளர் ஜவுளித்துறை திறன் தலைவர் பெரியசாமி, ஈரோடு எட்ஜ் ஹைட்ரா வென்ட்சர் ஆலோசகர் பொன்னுச்சாமி, சில்க் வில்லேஜ் நிறுவனர் கைத்தறி முருகேசன்,
சில்க் வில்லேஜ் நிர்வாக அதிகாரிகள் பழனிவேல், ராஜாராம், முருகானந்தம், மற்றும் சில்க் வில்லேஜ் நிறுவனத்தின் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 45 நாட்கள் பயிற்சியில் கைத்தறி, ஜக்கார்ட் டிசைனிங், மேட் வீவிங் உள்ளிட்ட வகுப்புகள் நடைபெற உள்ளது.













; ?>)
; ?>)
; ?>)