• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் வெளியீடு

Byவிஷா

Feb 24, 2024

இன்று பிற்பகல் முதல் 10ம் வகுப்பு தனித்தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள், தங்களது தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. பள்ளியில் பயின்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் வழங்கப்பட்டு விட்டன. இந்நிலையில் பொதுதேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு இன்று பிப்ரவரி 24ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் இணையதளத்தின் மூலம் ஹால் டிக்கெட்டுகளை தனித் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம், “10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in ல் ஹால் டிக்கெட் என்ற வார்த்தையை கிளிக் செய்ய வேண்டும். அதன் அருகில் உள்ள எஸ்.எஸ்.எல்.சி. பப்ளிக் எக்ஸ்சாமினேசன் மார்ச் ஃ ஏப்ரல் – 2024 ஹால் டிக்கெட் டவுன்லோடு என்ற வாசகத்தினை கிளிக் செய்ய வேண்டும். அந்த பக்கத்தில் தனித்தேர்வரின் விண்ணப்ப எண், நிரந்த பதிவெண், மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
மேலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் 26.02.2024 முதல் 28.02.2024 வரை, அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த தகவல்களை தனித்தேர்வர்கள் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளி தலைமையாசிரிடம் விசாரித்து அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதையும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மார்ச் / ஏப்ரல் – 2024 பொதுத்தேர்விற்கான கால அட்டவணையும் www.dge.tn.gov.in இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.