தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் தனித்தேர்வர்களுக்கு பிப்ரவரி 19ஆம் தேதியன்று ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரையும் பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை எழுத உள்ள தனித்தேர்ர்களுக்கான ஹால் டிக்கெட் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி வெளியிடப்படுகின்றது.
மேலும் பிளஸ் ஒன் (அரியர்), பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுக்கும் சேர்த்து ஒரே ஹால் டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மூன்றடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படவுள்ளதாக தகவல்..,
- இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி..,
- சக காவலர்கள் 27.95 லட்சம் நிதியுதவி..,
- எஸ்.ஐ.ஆர் குறித்து தவறான தகவல்களை பரப்ப கூடாது..,
- மறுசீரமைப்பு இயக்கம் காங்கிரஸ் கமிட்டி கலந்தாய்வு கூட்டம் ..,








