• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஜூலை 13ல் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு

Byவிஷா

Mar 29, 2024

2024ஆம் ஆண்டில் குடிமைப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குடிமைப் பணியிடங்களுக்கான குரூப் 1 போட்டி தேர்வு அறிவிப்பை, ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-ம் ஆண்டில் 90 பணியிடங்களுக்கான குரூப் 1 போட்டி தேர்வு அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.
மேலும் நேற்று முதல் ஏப்ரல் 27-ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வு ஜூலை 13-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தை பார்வையிடலாம். இவ்வாறு டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.