
வேளாண் பட்ஜெட்டை முன்னிட்டு தமிழ்நாடு சட்டசபைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜிகே மணி மற்றும் அக்கட்டியின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பச்சை நிற துண்டை அணிந்து வந்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 2வது முறையாக தாக்கல் செய்து வருகிறார். முன்னதாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டத்தை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நடத்தியதால், விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, வேளாண் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். பாசன வாய்க்கால்களை தூர்வார அதிக நிதி ஒதுக்கிடு செய்ய வேண்டும், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். மற்றும் விவசாயிகள் விளைப்பொருட்களை சந்தைப்படுத்தும் முறையை எளிமையாக்க வேண்டும் ஆகிய முக்கிய அறிவிப்புகளை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜிகே மணி மற்றும் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான மேட்டூர் சதாசிவம், தர்மபுரி வெங்கடேஷ்வரன், சேலம் அருள், மைலம் சிவகுமார் ஆகியோர் பச்சை நிற துண்டை அணிந்து தமிழ்நாடு சட்டசபைக்கு வருகை தந்தனர்.