மதுரை காந்தி மியூசியத்தில் அரசு அருங்காட்சியகம் மற்றும் மதுரையில் 18 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் விவேகன் ஓவிய நுண்கலை பயிற்சி மையம் சார்பாக மாபெரும் ஒவிய போட்டி நடைபெற்றது.

விவேகன் ஓவிய பயிற்சி மையத்தின் இயக்குநர் விவேகன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியானது ஆகஸ்டு 23, 24 செப்., 20, 21 என்று நான்கு பிரிவுகளாக நடைபெற்றது.
இப்போட்டியில் 5 வயது முதல் 17 வயது வரை மாணவ மாணவிகள் ஆரவமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெறும் முதல் மூன்று நபர்களுக்கு முறையே ரூ 10000,8000,5000 மதிப்புள்ள பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும், கலந்து கொண்ட அனைவர்க்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.