• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிரியங்கா சோப்ராவுக்கு கிடைத்த பிரமாண்ட பரிசு…

Byகாயத்ரி

May 23, 2022

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய்யுடன் தமிழன் என்ற படத்தில் அறிமுகமானார்.ஹிந்தியில் ஏகப்பட்ட படங்கள் நடித்த பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் பக்கமும் சென்று படங்கள் நடித்து வருகிறார். நிறைய வெப் சீரிஸிலும்கமி்டாகி இருக்கிறார். இவருக்கு 2018ம் ஆண்டு ஜோத்பூர் அரண்மனையில் நிக் ஜோனஸ் என்பவருடன் படு பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் தான் வாடகை தாய் மூலம் பெண் குழந்தையை இவர்கள் பெற்று இருந்தார்கள்.மகளுக்கு மாலடி மேரி எனவும் பெயரி வைத்தனர். பரிசளித்த நிக் சிட்டேடல் என்ற படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ராவுக்கு அவரது கணவர் விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.கடற்கரை மணல், ஆன் ரோடு,சகதி இப்படியெல்லாம் நிலப்பரப்புகளும் ஓட்டக்கூடிய All Terrain Vehicle மாடல் காரை பரிசளித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த காரின் விலை இந்திய விலைப்படி 17 முதல் 22 லட்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.