குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் அருகே உள்ள திடலில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தின விழா கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நிகழ்வு குமரி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும்,கழக அமைப்புச் செயலாளருமான தளவாய் சுந்தரம்..,
எம்ஜிஆர் தலைமையில் அமைந்த முதல் அதிமுக ஆட்சியில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆன நாஞ்சில் வின்சென்ட் நிதித்துறை இணை அமைச்சராக இருந்தார். கடந்த பல காலமாக தீவிர அரசியலில் இல்லாது கல்லூரி, பள்ளி நிர்வாகத்தில் முழு கவனத்தில் இருந்த நாஞ்சில் வின்சென்டை தீவிர அரசியலுக்கு மீண்டும் தளவாய் சுந்தரம் அழைத்து வந்த நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் கழக அமைப்பு செயலாளராக அறிவித்தார்.
நாஞ்சில் வின்சென்ட் தீவிர அரசியலுக்கு வந்த பின் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி. மண்டைக்காடு பகுதியில் நடைபெற்ற, அண்ணாவின் 117_வது பிறந்த நாள் நிகழ்வு.
அண்ணாவின் 117_வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் தளவாய் சுந்தரம்
குமரி மாவட்ட அதிமுக பொறுப்பாளரும், முன்னாள் மகளிரணி செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, முன்னாள் அமைச்சரும்,கழக அமைப்பு செயலாளர் கே.டி.பச்சைமால், மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன் ஆகிமோர் உரையாற்றிய பின் பேசிய நாஞ்சில் வின்சென்ட், புரட்சி தலைவர் முதல், முதலாக முதல்வராக பதவியேற்றபோது, முதல்வர் எம்ஜிஆர்_ யை நோக்கி பொருளாதாரம் தெரியுமா? என கேள்வி எழுப்பிய கூட்டத்தினரை நோக்கி பசியின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். தமிழகத்தில் பசித்த வயிற்றுடன் எவரும் இல்லை என செயலாக்குவதே எனது பணி என தெரிவித்தார். அவரது ஆட்சியில் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் என மக்களின் அன்றாட அவசிய பொருட்கள் விலை ஏறாது பார்த்துக்கொண்டார்.
புரட்சி தலைவியும் அவரது ஆட்சி காலம் முழுவதும் மக்களின் நலம் கருதிய திட்டங்கள், பயிலும் மாணவிகளுக்கு மடிக்கணினி, சைக்கிள்,இலவச பாட புத்தகங்களை வழங்கி தமிழகத்தில் ஒரு கல்வி புரட்சியை செய்தார்.
தமிழக முதல்வராக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இருந்த போது, கடுமையான கொரானா காலத்திலும், மக்களின் அன்றாட அவசிய பொருட்கள் விலை ஏறாது பார்த்துக்கொண்டார். விடியா திமுக ஆட்சியில் தினம், தினம் பொருட்களின்
விலை ஏறிவருகிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் விடியா திமுக ஆட்சியை வீட்டிற்கும் அனுப்ப பொதுச்செயலாளர் எடப்பாடி இதுவரை 153 தொகுதிகளில் மக்கள் சந்தித்து விட்டார். எஞ்சிய தொகுதிகளில் தொடர்ந்து மக்களை சந்திக்க உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தது உங்களுக்கு தெரியும். 10_ நாள் அவகாசம் கொடுத்தவரை 24 மணி நேரத்தில் தூக்கி வீசி நடவடிக்கை எடுத்ததை தமிழகமே பார்த்தது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகாவை வீட்டுக்கு அனுப்புவோம். இன்றைய எதிர்கட்சி தலைவரை முதல்வர் இருக்கையில் அமர்த்த, நாம் ஒவ்வொரு வரும் உறுதியேற்போம் என பேசினார் நாஞ்சில் வின்சென்ட்.