• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆளுநர் விவகாரம்: குடியரசு தலைவரிடம் புகார் அளிக்க திமுக திட்டம்

ByA.Tamilselvan

Jan 11, 2023

ஆளுநரின் செயல்பாடு குறித்து குடியரசு தலைவரிடம் புகார் அளிக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்வெளியாகிஉள்ளது
சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடுவதற்கு முன், ஆளுநர் வெளியேறியது குறித்து குடியரசித்தலைவரிடம் புகார் அளிக்க உள்ளனர். ஆளுநர் உரையில் சில பகுதிகளை தவிர்த்தது தொடர்பாகவும் நாளை குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து புகார் கூறவுள்ளனர். சட்டப்பேரவையின் மரபை மீறியதாக ஆளுநர் மீது திமுகவினர் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.இதற்காகதிமுக சார்பாக குடியரசுத்தலைவரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா, டில்லி பயணமாகியுள்ளனர்.நேரம் அளிக்கப்பட்டால், ஆளுநரின் செயல்பாடு குறித்து நடவடிக்கை எடுக்கவும், ஆளுநரை திரும்பப்பெறவும் வலியுறுத்தப்படவுள்ளது.