அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள், சமத்துவ நாள் விழாவை முன்னிட்டு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று, பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக 1164 பயனாளிகளுக்கு ரூ.8.27 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இவ்விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் , மாவட்ட வருவாய் அலுவலர் க.அன்பழகன், மாநகராட்சி மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி , உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அரசு நலத்திட்ட உதவிகள்
