கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. ஊரடங்கு அறிவிப்பில் கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் 50 சதவீதம் வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பொங்கல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில், தற்போது அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. மேலும், அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகை என்றாலே ஜல்லிக்கட்டுதான் உலக தமிழர்கள் அனைவருக்கும் நினைவிற்கு வரும். தற்போது அதிகரித்து வரும் கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. தற்போது, ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.