சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் ரூ.1,588 கோடியில் காற்றழுத்த கருவிகள் உற்பத்தி திட்டத்தை சாம்சங் நிறுவனம் தொடங்க உள்ளது. நடப்பாண்டில் சாம்சங் நிறுவனம் மொத்தம்ரூ. 1,800 கோடி அளவுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளது. மேலும் முதலீடுகள் அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகி தொழில்துறை வளர்ச்சி அடையும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.