• Thu. Dec 4th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்ல் அரசு ஊழியர்கள் போராட்டம்..,

ByS.Ariyanayagam

Dec 4, 2025

திண்டுக்கல் பேருந்து நிலையம், MGR-சிலை அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக மறியல் போராட்டம் நடந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்று கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும். அரசுத்துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.