• Fri. Oct 4th, 2024

கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்புகிறார்

ByA.Tamilselvan

Aug 18, 2022

இலங்கையில் அந்த நாட்டு மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற கோத்தபய ராஜபக்சே அடுத்தவாரம் நாடு திரும்புகிறார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்குள்ளான அந்த நாட்டு மக்கள் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என கூறி போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து ஜூலை 13-ந் தேதி கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் மாலத்தீவுக்கு தப்பி ஓடினார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினமா செய்தார். சிங்கப்பூரில் அவரது விசா காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த 11-ந் தேதி தாய்லாந்துக்கு சென்றார் இந்த நிலையில் கோத்தபய அடுத்த வாரம் தாய்லாந்தில் இருந்து இலங்கை திரும்பவார் என அவரது உறவினரான உதயங்க வீரதுங்கா தெரிவித்துள்ளார். கோத்தபய வருகிற 24-ந் தேதி இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *