• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஸ்மார்ட் வாட்ச்களில் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள்

Byவிஷா

Jun 14, 2025

கூகுள் நிறுவனம் நிலநடுக்கத்தின் வசதியை அறிந்து கொள்ளும் வசதியை
ஸ்மாட்போன்களில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து தற்போது ஸ்மாட் வாட்ச்களிலும் இந்த வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

புதிய அறிக்கையின்படி, Wear OS கடிகாரங்களில் நிலநடுக்க எச்சரிக்கைகளை முன்கூட்டியே வழங்கும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிகிறது. இதுபோன்ற பேரிடர் நிகழ்வுகள் ஏற்பட்டால் மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடத்திற்கு விரைந்து செல்ல உதவும். அந்தவகையில், கூகுள், Wear OS ஸ்மார்ட்வாட்ச்களுக்கு முன்கூட்டிய பூகம்ப எச்சரிக்கைகளை வழங்குவதை சோதித்து வருவதாக Android ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த வசதி, Android ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள Android Earthquake Alerts Systemஐ அடிப்படையாகக் கொண்டது. மேலும், இது பல ஸ்மார்ட்போன்களின் ஆக்சிலரோமீட்டர் (accelerometer) சேமிப்புகள் ஒரே நேரத்தில் அதே பகுதியில் அதிர்வுகளைப் பதிவு செய்தால், அந்த தரவுகளை கூகுள் பரிசோதித்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக முடிவு செய்கிறது. அதன் பிறகு, அருகிலுள்ள பயனர்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்படுகிறது.

மைக்ரோஃபோன் அல்லது சிம் வசதி கொண்ட Wear OS ஸ்மார்ட்வாட்ச்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் சிலர் தங்கள் போன்களை அவ்வபோது மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டு ஸ்மார்ட் வாட்ச் உடன் வெளியே செல்கிறார்கள். எனவே, அவர்களுக்கும் உடனடியாக இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் எச்சரிக்கை அனுப்பப்படுகிறது. இதனால் உடனடியாக அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல முடியும்.

கூகிள் தற்போது தனது Android Earthquake Alerts System ஐ Wear OS ஸ்மார்ட்வாட்சுகளுக்கும் விரிவாக்கி வருகிறது. Google System Release Notes இல் புதிய “Safety & Emergency” பிரிவில், “நிலநடுக்கம் ஏற்படும் போது உங்கள் ஸ்மார்ட் வாட்ச்சில் அதிர்வுகள் ஏற்படும். அதன்மூலம் உங்களுக்கு எச்சரிக்கைகள் கிடைக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு “Wear” என்பது Wear OS-ஐ குறிப்பது. Wear OS என்பது Android போன்கள்போல் Google Play சேவைகள் உள்ளடக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட்வாட்ச் இயங்குதளமாகும். இந்த அம்சம், Google Play Services version 25.21-இன் ஒரு பகுதியாக இருக்கும். நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளபோது, உங்கள் வாட்ச் மூலம் உடனடி எச்சரிக்கை தெரிவிக்கப்படும்.

தற்போது Google இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இந்த அம்சம் குறித்து முன்னதாகவே APK teardown-இல் குறிப்புகள் காணப்பட்டுள்ளன. Android Authority தளத்தில் பணிபுரியும் நிபுணர்கள், தங்களின் சோதனை சாதனத்தில் இந்த அம்சத்தை இயக்க முடிந்ததாக தெரிவித்துள்ளனர். அதாவது, “Wear OS-இல் நிலநடுக்க எச்சரிக்கை அம்சம், Android போன்களில் செயல்படும் முறைபோல் தான் வேலை செய்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றார்.

அதாவது, நீங்கள் Wear OS வாட்ச் வழியாக நிலநடுக்க எச்சரிக்கையைப் பெறும் போது, அது வெறும் எச்சரிக்கையாக மட்டுமல்ல, கீழ்கண்ட விவரங்களும் சேர்ந்து வழங்கப்படும்: நிலநடுக்க மையம் (Epicentre) உங்கள் இருப்பிடத்திலிருந்து எத்தனை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. உங்கள் பகுதியில் ஏற்படக்கூடிய அதிர்வுகளின் தீவிரத்தன்மை, அதாவது, மிகவும் சிறிய அதிர்வா? அல்லது ஆபத்தானதா? என்பதைக் கணிப்புடன் வழங்கும். இந்த தகவல்கள் அனைத்தும் உடனடி நொடிகளில் உங்கள் ஸ்மார்ட் வாட்சில் தோன்றும்.

இந்த வசதி செயல்பட, உங்கள் ஸ்மார்ட்வாட்சில் சிலுலார் (cellular) இணைப்பு தேவைப்படலாம். அதாவது,
eSIM ஆதரவு கொண்ட Wear OS வாட்ச்கள், உதாரணமாக Samsung Galaxy Watch போன்றவை இந்த நிலநடுக்க எச்சரிக்கை அம்சத்தை சுயமாக, உங்களுடைய போன் அருகிலில்லாமலும் பெற முடியும். நீங்கள் Wi-Fi அல்லது Bluetooth இல்லாத சூழ்நிலையில் இருந்தாலும், eSIM மூலமாக நேரடி Google சேவைகள் கிடைக்கும்.

நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகள் நெருக்கடியான சூழ்நிலைகள், நவீன தொழில்நுட்ப நிறுவனங்கள் தீர்வு காண முயலும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று. அதனால்தான், Google போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.தற்போது, Wear OS வாட்ச்களில் நிலநடுக்க எச்சரிக்கை அம்சத்தின் அறிமுகம் இந்த முயற்சியில் ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.