• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கூகுள் டேட்டா சென்டரில் தீ விபத்து…

Byகாயத்ரி

Aug 9, 2022

கூகுள் டேட்டா சென்டரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி கூகுள் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள கூகுள் டேட்டா சென்டர் மிகவும் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டது. இந்த சென்டரில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கூகுள் டேட்டா சென்டரில் மின்கசிவு காரணமாக இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதாகவும் இந்த தீ விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்ததாகவும், மூன்று பேரும் கூகுள் டேட்டா சென்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படை மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்து காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் கூகுள் சியர்ஸ் சேவை தடைப்பட்டுள்ளது.