• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்கத் தேர் வழிபாடு..,

ByKalamegam Viswanathan

Jun 20, 2026

தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாள் வருகிற 22-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தவெக நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, அறுபடை வீடுகளில் முதற்படை வீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தவெக நிர்வாகிகள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தவெக சசி முருகன் மற்றும் ரேஷன் கடை கார்த்தி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முதல்வர் விஜய் நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என வேண்டிக்கொண்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

மேலும், பக்தர்கள் தங்கத் தேரை இழுத்து கோவில் வளாகத்தை ஒரு முறை வலம் வந்து முருகனை தரிசனம் செய்தனர். விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த வழிபாட்டில் தவெக நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.