• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எடப்பாடியாரின் பிறந்தநாளில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..,

ByT.Vasanthkumar

May 6, 2025

அஇஅதிமுக கழக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி‌.கே.பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாள் விழா வருகின்ற மே 12ஆம் தேதி தமிழக முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

அதன்படி பெரம்பலூர் மாவட்ட அதிமுக கழக அலுவலகத்தில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் தலைமையிலும் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வரகூர்.அருணாச்சலம் முன்னிலையிலும் நடைபெற்றது.

அப்போது பேசிய பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் பிறந்த நாளில் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் எனவும் மேலும் அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நாகராஜன் ,மாவட்ட கழக இணை செயலாளர் ராணி, மாவட்ட கழக துணை செயலாளர் லட்சுமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராஜேஸ்வரி,பொதுக்குழு உறுப்பினர்கள் வீரமுத்து,கே.ஏ.ரங்கநாதன், மாவட்ட கழக அணி செயலாளர்கள் வீரபாண்டியன், சந்திரகாசன், செந்தில்குமார், கருணாநிதி,ஜமால் முகமது , முருகேசன்,கணேசன், செந்தில் ராஜன், திருமால்மருகன், காவியா ரவி, ஆர்பிஎம்.பாலாஜி, ஒன்றிய கழக செயலாளர்கள் டி.என். சிவப்பிரகாசம், உதயம்.ரமேஷ், செல்வமணி, சசிகுமார், ஏ.கே. ராஜேந்திரன், புஷ்பராஜ், ராமராஜ், யு.அழகுதுரை, நகர கழக செயலாளர் ராஜபூபதி,பேரூர் கழக செயலாளர்கள் செந்தில்குமார்,விவேகானந்தன், ஆறுமுகம், அம்மா பேரவை மாவட்ட தலைவர் கீழப்புலியூர் நடராஜன், வழக்கறிஞர் அணி பிரிவு மாவட்ட தலைவர் கே.என்.ராமசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு துணைத் செயலாளர் கதிர்.கனகராஜ்,மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் தேவராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர்கள் பழனிவேல்,அருள் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.