தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. இதனால் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்து 65 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதும், சர்வதேச வர்த்தகப் போரால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையின் காரணத்தால் தங்கத்தின் விலை இந்தியாவில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு (2024) அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த 3-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிரடியாக உயர்ந்தது. ஆனால்,, மறுநாள் ரூ.360 குறைந்தது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை ஒரு கிராம் 8 ஆயிரத்து 220 ரூபாய்க்கும், சவரன் 65 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது.
இந்த நிலையில், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 17) ஆசியச் சந்தை தொடங்கிய சில மணி நேரங்களில் 3,005 டாலர் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டு, பின்னர் சற்று குறைந்து 2,985 டாலர் அளவில் வலுவான நிலையில் உள்ளது. ஆனாலும், டாலர் மதிப்பில் ஏற்பட்ட தடுமாற்றம் இந்திய சந்தையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 8 ஆயிரத்து 210 ரூபாய்க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 65ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து வெள்ளி 113 ரூபாய்க்கும் கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 13,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.