• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தை பொங்கலை போற்றும் விதமாக தங்க ஓவியம்..,

BySeenu

Jan 6, 2024

ஜல்லிக்கட்டு, தை பொங்கல், உழவர்களை போற்றி தங்க ஓவியம் வரைந்த கோவை ஓவியர் ராஜா.

பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் பண்டிகைக்கு இப்பொழுது பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையிலே கோவையைச் சார்ந்த ஓவியர் யு. எம். டி. ராஜா, 700 மில்லி கிராம் தங்கத்தைக் கொண்டு பொங்கல் பண்டிகையை ஒற்றுமையில் ஓவியம் ஒன்றை வரைந்திருக்கின்றார். பாரம்பரியத்தை போற்றும் வகையில், ஜல்லிக்கட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், உழவர்களை வணங்கும் விதமாகவும் இந்த ஓவியத்தை வரைந்ததாக அவர் தெரிவித்தார். இரண்டு நாட்கள் இதற்காக செலவழித்த ஓவியர் யு எம் டி ராஜா, மெமரி கார்டுகளில் பின் பகுதியில் இந்த ஓவியங்களை வரைந்து இருக்கின்றார். 700 மில்லி கிராம் தங்க துகள்களை நுணுக்கமாக எடுத்து, பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டு மாடுகள் நிற்பது போன்றும், தைப்பொங்கல் கொண்டாடும் உழவர் ஏர் கலப்பையுடன் கரும்பு பானை மாடுகளுடன் நிற்பது போன்றும், ஜல்லிக்கட்டு காளையை காளையர்கள் அடக்குவது போன்றும் இந்த தைப்பொங்கல் தங்க ஓவியம் வடித்து இருக்கின்றார். இரண்டு நாட்கள் செலவழித்து துல்லியமாக தங்க துகள்களை கொண்டு தைப்பொங்கலை கொண்டாடும் விதமாக ஓவியம் வரைந்து இருக்கின்றார்.