• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

காமதேனு வாகனத்தில் ஹெத்தை அம்மன் திருவீதி உலா

ByG. Anbalagan

Apr 8, 2025

காமதேனு வாகனத்தில் ஹெத்தை அம்மன் அலங்காரத்தில் அம்மனின் திருவீதி உலா வெகு விமர்சியாக நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில்  படுகர் சமுதாய மக்கள்  அதிக அளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் பாரம்பரியமான இயற்கை வழிபாட்டு முறையையும் ஹெத்தையம்மன் குலதெய்வ வழிபாட்டையும் மேற்கொள்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அருள்மிகு மாரியம்மன் காளியம்மன் திருக்கோவிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினர் அம்மனை அவர்களது வழக்கத்திற்கு ஏற்ப அலங்கரித்து திருவீதி உலா அழைத்து வருவது பல ஆண்டுகளாக நடைமுறைகளில் இருந்து வருகிறது.

அவ்வாறாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினர் திருவிழாவை கொண்டாடும் பொழுது ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் என சிறப்பான முறையில் நடைபெறும். வரும் பக்த கோடிகளுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.

இன்றைய தினம் நீலகிரி படுகர் சமுதாய மக்களின் தேர் திருவிழா ஊட்டி மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. இதில் அதிகாலை நேரத்தில் இருந்து கோவிலுக்கு உட்புறம் சிறப்பு பஜனை ஆடல் பாடல் ஆன்மீக சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டு குலவிருத்திக்காக தெய்வத்தை வழிபட வேண்டும் என்ற ஒரு கருத்தினையும் முன் வைத்துள்ளனர்.

மேலும்  சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு அம்மன் திருவீதி உலா துவங்கியது. லோயர் பஜார் மத்திய பேருந்து நிலையம் மற்றும் மெயின் பஜார் வழியாக காபி ஹவுஸ் சதுக்கம் மற்றும் ஏடிசி வழியாக கோவிலை வந்து அடைந்தது.

இதில் ஆர்கெஸ்ட்ரா இசைக் கச்சேரிகள் பேண்டு வாத்தியங்களுக்கு பல்வேறு மக்களும் நடனமாடி மகிழ்ந்தனர். மேலும் திருத்தேருக்கு முன்னதாக அனைவரும் ஒன்றிணைந்து பஜனை பாடல்கள் பாடியும் சிறப்பித்தனர்.

மின்விளக்கு ஒளியில் வண்ண வண்ண பட்டாசுகள் வானத்தில் வட்டமிட அம்மனின் திருவீதி உலா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.