கன்னியாகுமரி கடலில் கண்ணாடிப்பாலம் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு
அனுமதிக்கப்பட்டது.
இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடம். கன்னியாகுமரி மூன்று கடல்கள் சங்கமிக்கும் பகுதி என்பதுடன், சூரிய உதயம், அஸ்தமனம் இரண்டையும் பார்க்கும் இயற்கையின் ஒரு அதிசய நிலப்பரப்பு.

கன்னியாகுமரி கடலில் ஏற்கனவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அருகே. வான் மேகங்கள் உரசி செல்லும் உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவர் சிலை 2000_ம் ஆண்டில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியால் திறக்கப்பட்டது.
திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட தின் 25_ வது ஆண்டு விழாவும், திருவள்ளுவர் சிலை, சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே உள்ள கடல் மேற்பரப்பின் பகுதியில் 77_மீட்டர் நீளமும்,10_ மீட்டர் அகலமும் உள்ள கண்ணாடிப் பாலத்தை தமிழக அரசு ரூ.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்துகட்டியுள்ளது. கண்ணாடிப் பாலமும் அய்யன் திருவள்ளுவர் சிலை யின் 25_ வது ஆண்டின் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த டிசம்பர் 30_ம் நாள் திறந்து வைக்கப்பட்டது.

கண்ணாடிப் பாலத்தின் நீளம் 77_ மீட்டர்,அகலம் 10-மீட்டர். பாலத்தின் நடுப்பகுதியில் (10_மீட்டர்) பகுதியில் 2.05 மீட்டர் அகலத்தில் கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 31 கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடிகள் ஒவ்வொன்றும் .53 மி.மீ கனம் கொண்டது ஒவ்வொரு கண்ணாடியும் 558_ கிலோ எடை கொண்டது, ஒவ்வொரு கண்ணாடியும் 750_ கிலோ எடையை தாங்கும் வலிமை உடையது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 30_ம் நாள் கண்ணாடிப் பாலத்தை திறந்தாலும். இன்று முதல் (ஜனவரி_05) சுற்றுலா பயணிகள்.சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் பகுதியில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு பாலத்தின் வழியாக நடந்து செல்ல இன்று காலை முதல் முதல்முதலாக அனுமதிக்கப்பட்டனர்இதன் மூலம் இனி படகு போக்குவரத்து நடக்கும் நாட்களில் எல்லாம் அய்யன் திருவள்ளுவர் சிலை பாறைக்கு எவ்விதமான தடையும் இல்லாமல் சுற்றுலா பயணிகள் கண்ணாடிப் பாலத்தின் வழியாக திருவள்ளுவர் சிலைக்கு செல்லலாம்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் ஆற்றிய உரையில். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் சார்பில், பெரும் தலைவர் காமராஜர், குமரி தந்தை மார்சல் நேசமணி தன்னை தமிழ் மாணவன் என்று அறிவித்த யூ.ஜி. பேப் பெயர்களில் புதிய மூன்று படகுகள் வாங்கப்படுவதாகவும் அறிவித்தார்.
கன்னியாகுமரி கடல் பரப்பின் மேல் பகுதியில் கட்டப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தின் கண்ணாடிகள் மீது மிதியடிகள் அணிந்து நடந்து செல்ல முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

குமரி கடலில் கட்டப்பட்டுள்ள கண்ணாடிப்பாலத்தின் மற்றொரு தோற்றம். இரண்டு மலைகளுக்கு இடையே சூரியன் உதிப்பது போன்ற காட்சி. தி மு கவின் தேர்தல் சின்னத்தின் அடையாளம் போன்ற ஒரு காட்சியை திருவள்ளுவர் சிலை, சுவாமி விவேகானந்தர் நினைவு இல்லம் இடையே உள்ள கண்ணாடிப் பாலம் வெளிப்படுத்துவது போல் இருப்பது, இயல்பாக அமைந்துள்ளது என்ற கருத்து தமிழக மக்களின் பார்வையில் ஏற்பட்டுள்ளது.








