• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஏதாவது அப்டேட் குடுங்க – விஜய் ரசிகர்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீசிற்கு இன்னும் 16 நாட்களே உள்ளதால் ரிலீசிற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. உலகம் முழுவதும் பீஸ்ட் படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது. ஃபஸ்ட் சிங்கிளாக அரபிக்குத்து பாடல் வெளியாகி செம டிராண்டானது. பின்னர், ஏதோ காரணங்களால் ஆடியோ வெளியீட்டு விழா நடக்காது என தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து பீஸ்ட் டீசர் வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க, டீசருக்கு பதில் இரண்டாவது சிங்கிளாக விஜய் சொந்த குரலில் பாடிய ஜாலியோ ஜிம்கானா பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டனர். தொடர்ந்து ட்ரைலர் தொடர்பான அறிவிப்பு மார்ச் 31 ம் தேதி வெளியாகும், ஏப்ரல் 2 ம் தேதி யுகாதி அன்று பீஸ்ட் டிரைலர் வெளியாகும் என தகவல் பரவியது.

ஆடியோ ரிலீஸ், மோஷன் போஸ்டர், க்ளிம்ப்ஸ் இல்லை! தற்போது டீசரும் இல்லையா என கேட்டு ட்விட்டரில் ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள். இதன் காரணமாக WeWantBeastTeaser, BeastTrailer,BeastTeaser ஆகிய ஹேஷ்டேக்குகள் தொடர்ந்து டிரெண்டிங் ஆகி வருகின்றன.