• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 24, 2023
  1. ”எற்பாடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக?
    காலப்பெயர்
  2. “சாக்காடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக?
    தொழிற்பெயர்
  3. “கேடு” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?
    கெடு
  4. “சாக்காடு” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?
    சா
  5. “பிசிராந்தையார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்” – எவ்வகை வாக்கியம்?
    செய்தி வாக்கியம்
  6. “காந்தியடிகள் உண்மை பேசாமல் இரார்” – எவ்வகை வாக்கியம்?
    பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்
  7. வலதுபக்கச் சுவற்றில் எழுதாதே! – வழூஉச் சொல்லற்ற வாக்கியமாக மாற்று?
    வலப்பக்கச் சுவரில் எழுதாதே
  8. அவன் கவிஞர்கள் அல்ல – ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
    அவன் கவிஞன் அல்லன்
  9. ”திவ்வியகவி” என்ற பெயரால் அழைக்கப்படுபவர்?
    பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்
  10. மாதவியின் மகளின் பெயர்?
    ஐயை