• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 22, 2023
  1. விமானத் தபால்தலைகள் வெளியிட்ட முதல்நாடு எது?
    பாரதம் 1929.
  2. உலகிலேயே பத்திரிகைகளுக்கு அதிக நேரம் பேட்டியளித்த பிரதமர் யார்?
    திரு. வி.பி.சிங்.
    இவர் பதவியேற்ற இரண்டாவது சந்திப்பில் 800 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு டெல்லி ஸ்ரீபோர்ட் ஆடிட்டோரியத்தில் 2 மணி நேரம்வரை பதில் அளித்து உலக சாதனை புரிந்தார்.
  3. உலகின் மிகச் சிறிய சந்து எது?
    புனித ஜான் சந்து. ரோமில் உள்ளது. 48 செ.மீ. அகலம்.
  4. உலகிலேயே பெண் எம்.பிக்கள் அதிகம் உள்ள நாடு எது?
    ஸ்வீடன்.
  5. உலகில் அதிக அளவில் சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு எது?
    ஜெர்மனி
  6. இந்தியாவில் செயல்படும் ஒரே எரிமலை எது?
    பாரன்தீவு
  7. உலக அளவில் அதிக அளவில் அணுசக்தி உற்பத்தி செய்யும் நாடு எது?
    அமெரிக்கா
  8. அணுசக்தி உற்பத்திக்கு பயன்படும் தனிமங்கள் எவை?
    தோரியம், யுரேனியம்
  9. பொருள் ஒரு விநாடியில் அடையும் இடப்பெயர்ச்சி….?
    திசைவேகம்
  10. திசைவேகத்தின் அலகு?
    மீ/வி