• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 5, 2024

1. அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமைகளின் மீது நியாமான கட்டுப்பாடுகளை விதிக்கின்ற உரிமையை யார் வைத்துள்ளார்கள்? பாராளுமனறம்

2. அரசியமைப்பு அவையில் ‘குறிக்கோள் தீர்மானம்” கொண்டு வந்தவர் ஜவகர்லால் நேரு

3. இந்தியாவில் ஒரு புதிய மாநிலமானது எதன் மூலம் உருவாக்கலாம்? பாராளுமன்றத்தில் சாராதணப் பெரும்பாண்மை

4. முகப்புரையை அரசியலமைப்பின் அடையாள அட்டை என்று கூறியவர் யார்? என்.ஏ.பல்கிவாலா

5. “அரசியலமைப்பின் மனசாட்சி” என்றழைக்கப்படுவது எது? அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் அடிப்படை உரிமைகளும் இணைந்து

6. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி-XV எதைப்பற்றி கூறுகிறது? தேர்தல்கள்

7. இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டில் அதிகாரப்பூர்வமாக அரசியலமைப்பு நிர்ணயசபையை கோரியது? 1935

8. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடையாள அட்டை என அழைக்கப்படுவது எது? முகப்புரை

9. இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் எந்தப் பகுதி குடியுரிமை பற்றி கூறுகின்றன? பகுதி – 2

10. இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் யாருக்கு இணையான சலுகைகள் மற்றும் தடைகாப்பு நிலையினைப் பெறுகிறார்? பாராளுமன்ற உறுப்பினர்