• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

May 19, 2022

1.கார்டெல் என்றால் என்ன?
நாட்டின் முன்னணி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து, திறனுக்கும் குறைவாக உற்பத்தி செய்து, மார்க்கெட்டில் நிரந்தர தேவையை ஏற்படுத்தி, அதன் மூலம் விலையை இஷ்டத்துக்கு உயர்த்தி கொள்ளை லாபம் பார்ப்பது.
2.கார்டெல் அமைத்து செயல்படுவதால் விலை உயரும் பொருட்கள் வரிசையில் சர்வதேச அளவில் முன்னணி வகிப்பவை?
தங்கம், கச்சா எண்ணை
3.அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் சில பொருட்கள்?
அலங்கார மீன், சணல், பாசுமதி அரிசி
4.உலகளவில் கோலோச்சும் ரீடெய்ல் ஜாம்பவான்கள்?
வால்மார்ட், டெஸ்கோ, கேரிபோர், மெட்ரோ, செவன், ஏயான், யாமாடா டென்கி, சுனிங், ரிலையன்ஸ் ரீடெய்ல் (இந்தியா)
5.ஏற்றுமதியில் டுஐடீழுசு என்றால் என்ன?
டுழுNனுழுN ஐNவுநுசு டீயுNமு ழுகுகுநுசு சுயுவுநு
6.பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் எத்தனையாவது முறையாக முதல்வர் ஆகியுள்ளார்?
5
7.தாமிர தாது அதிகம் உள்ள மாநிலம்?
ராஜஸ்தான்
8.எப்போது முதல் இந்தியாவில் பேப்பர் கரன்சி முறை செயல்படுகிறது?
1862
9.இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?
டாக்டர்.ராஜேந்திர பிரசாத்
10.கே.ஆர்.எஸ், கபினி மற்றும் ஹேமாவதி அணைகள் எந்த மாநிலத்தில் உள்ளது?
கர்நாடகா