• Sat. May 4th, 2024

இரட்டை இலை சின்ன பெற பொதுக்குழுவை கூட்ட வேண்டும்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ByA.Tamilselvan

Feb 3, 2023

ஈரோடு இடைத்தேர்தலுக்கு இரட்டை இலை சின்னம் பெற அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர்.

அப்போது, அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுத்து ஒப்புதல் வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கும் பொதுக்குழுவில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் கூறினர். இந்த தீர்ப்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே என்றும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாக இந்த தீர்ப்பை வழங்குவதாகவும் நீதிபதிகள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *